வெற்றிடத்தை நிரப்பிக்கொள்ளும் வீடு!
உறக்கத்தை கலைக்கும் துயர்!
வெற்று பாத்திரத்தில் உணவினை தேடும் பூனை!
வேலை முடித்து வீடு திரும்புகையில்
வீட்டின் இருட்டே எனக்கு வரவேற்பு!
வறுமைக்கு குறைவில்லை இங்கு!
தொலைபேசியின் வழி ஒலிக்கும்
என் அம்மாவின் குரல்!
அந்நாள் எனக்கு அதுவே ஊக்க மருந்து!
விழியின் நீர்துடைக்க விரல்கள் தரும்
ஜன்னலின் வழி வீட்டின் உள்நுழையும்
வெளிச்சம் தரும் நிலவின் ஒளி!
அன்பை எதிர்நோக்கும் கண்களுக்கு
ஏமாற்றம் என்றும் எதிர்தாக்கும்!
வாங்கிய கடன்கள் அனைத்தும்
என் கண் முன் தோன்றி
காயத்தை கணக்கில்லாமல் தந்து செல்லும்!
இன்பத்தை பகிர்ந்து கொள்ள ஆளில்லை!
மாதமானால் வாடகை தொகையை நினைத்து
மனம் மிகவும் கணக்கிறது!
சமைப்பதற்கு இங்கு ஒன்றுமில்லை!
தனிமையில் வீடு கூட சுமை!
தனிமையின் ஒளியில் தினந்தோறும் எனது வீடு!!!
முகவரி
க. பூமணி,
எண் : 2/34, ஏரிக்கரை தெரு, துண்டலம், அண்ணா நகர், அருகில் நும்பல், சென்னை -600077.