எது சுதந்திரம்
1947 இல் கிடைத்தது
அன்னியர் ஆதிக்கத்திலிருந்து இந்திய மண்ணுக்கு சுதந்திரம் மனிதனுக்கு………
இன்று
மதவெறியர்களின் பிடியிலிருந்து வேண்டும் மனித மனங்களுக்கு சுதந்திரம் !
உலகம் எங்கும் தீவிரவாதத்தை வேருடன் அழித்திட உலக அரங்கினில்
ஒன்று கூடும் நாளே சுதந்திரம்!
நாடெங்கும்
பசுமை புரட்சியை உருவாக்க அயராது பாடுபடும் நாளே பண்பட்ட சுதந்திரம்!
சாதி ‘போர் தடுத்து
சமத்துவம் படைத்திட சாதிப்போரைக் கொண்டு சரித்திரம் படைத்தால் சுதந்திரம்!
மது’ அரக்கனை விரட்டி
மானமிகு வாழ்வு தந்து
பாரத தாய்க்கு மகுடம் சூடும் நாளே உண்மை சுதந்திரம்!
தோற்றம் அழகு சுழ்கடல் அழகு
வடக்கே இமயம் தெற்கே குமரி கிழக்கே வங்கம் மேற்கே அரபி இயற்கை அரண் இனிய நாடு
எல்லா மதமும் இங்கு உண்டு எனினும் நாங்கள்மனிதர்களே( இந்தியரே )
எல்லா மொழியும் இங்கு உண்டு எனினும் அனைத்தும் சம்மதமே!
பசுமை நிலைக்க நீரிடுவோம் பல்லுயிர் புசிக்க சோறிடுவோம் பண்ணும் பரதமும் பயின்றிடுவோம்
பாரதம் காத்து வாழ்ந்திடுவோம்!
தள்ளாவிளையுளும் தக்காரும் தாழ்விலா
செல்வரும் சேர்வது நாடு
எனும் வள்ளுவன் வாக்கினை மெய்ப்பிக்கும் நாடு எமது நாடு!
ஆயக்கலைகள் அறிந்திடுவோம் அன்புநெறி காத்திடுவோம் அன்னியர் கொடுமைக்கு விலங்கிடுவோம்
பாரதத் தாயை வணங்கிடுவோம்!
அன்பே விளக்காக ஆற்றலே நெய்யாக
இனிய சிந்தையை திரியாக்கிநாட்டில்
ஞானச்சுடர் விளக்கு ஏற்றுவோம் ஞாலம் போற்ற வாழ்வோம்!
சாந்தகுமாரி எத்துராசன் திருவள்ளூர்
SanthakumariEthurasan
Rtd.school head
Founder: Avvai aram kakkum manram
Thiruvallur