எது சுதந்திரம்…
எது சுதந்திரம் என்று சுதந்திரமாக கேட்க முடிவது சுதந்திரம்….
மனதில் பட்டதை எவரையும் புண்படுத்தாமல் செல்ல முடிவது அது சுதந்திரம்…
எவராலும் மனதாலும் உடலாலும் காயப்படுத்தாமல் வாழ முடிந்தால் அது சுதந்திரம்…
தனது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தங்கு தடையில்லாமல் செய்ய முடிந்தால் அது சுதந்திரம்…
விரும்பியவர்களுடன் விரும்பயவாரு வாழ முடிந்தால் அது சுதந்திரம்…
இனத்தாலும் மதத்தாலும் சாதியாலும் வேறுப்பாடின்றி வாழ முடிந்தால் அது சுதந்திரம்….
விளம்பரங்களையும் கவர்ச்சியான பேச்சுகளையும் ஆராய்ந்து தன் மனசாட்சியுடன் நடந்தால் அது சுதந்திரம்…
நாட்டுக்கு சுதந்தரம் சமுதாயத்தை மேம்படுத்தும்…
வீட்டுக்கு சுதந்திரம்
மனிதமனத்தை மேம்படுத்தும்…
மனதுக்கு சுதந்திரம் உயிரை மேம்படுத்தம்…
உயிரின் சுதந்திரம்
மறுபடி பிறவா வரம் பெறும்….
Nagarajan Qatar Coordianator