எனது வீடு, நமது நாடு எது சுதந்திரம்.?
அருமையும் பெருமையும்
பேசும் கதவுகளும்
கண்ணீரும் கோபமும்
பார்த்த அறைகளும்
நறுமணமும் புகையும்
கண்ட அடுப்படியும் அமைந்த இடம்
வீடு ஒருசுயநல சுகத்தலம்.!
இந்திய நாடு பழம்பெரும் நாடு
பல்கலை மிகுந்த பெருமைமிகு நாடு
சாதிகள் நிறைந்த சமத்துவ நாடு
சகோதர நட்புள நடுநிலை நாடு
பண்பாடுடைய பண்டைய நாடு
மண்ணில் வளரும் சந்தன மரம்போல்
மக்கள் வாழும் மானுட நாடு.!
சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளை போற்றுவோம்
இதம் தரும் சுதந்திர நாளில் தேசியக்கொடியை ஏற்றுவோம்
சுயநல சுகத்தல வீட்டை விட
பாரில் பறந்து விரிந்து சாதிக்க
அழைக்கும் நமது நாடே நமது சுதந்திரம்.!
— தஸ்தகீர் சுலைமான்
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம்.