வேள்பாரி: கவிதை
பறம்பு மலையை ஆட்சிசெய்பவரே!
குறுநில மன்னனான குலவிளக்கே!
வேளிர் குலத்தின் விடிவிளக்கே!
கொடையில் புலவர்களை ஈர்த்தவரே!
கபிலரின் நண்பரே!
முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளலே!
பறம்பு நாட்டின் செழிப்பினை உயர்த்தியவரே!
குவளை மலரின் மணத்தை வீச செய்தவரே!
மூவேந்தர்களையும் வியக்க வைத்தவரே!
வீரத்தில் சிறந்து விளங்கியவரே!
மகாவீரனான வேள்பாரியே!
கு.சுகாசினி,
இளங்கலை இரண்டாமாண்டு தமிழ்,
கு.சுகாசினி,
இளங்கலை இரண்டாமாண்டு தமிழ்,
அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி- ஊற்றங்கரை, கிருஷ்ணகிரி.