வெற்றிவீரன் வேள்பாரி
இம்மண்ணுலகம்
ஈன்றெடுத்த
மாமன்னனே!
தமிழுலகம்
தந்த
தவப்புதல்வனே!
கடையேழு
வள்ளல்களில்
ஒருவனே!
கார்மேகமாய்
கருணைமழைப்
பொழிந்தவனே!
பறம்பு மலைக்கு
அதிபனே!
பார்போற்றும்
பண்பிற்கு
இலக்கணமே!
குறுநில மன்னனாய்
இருந்தவனே!
குறுகிய மனமோ
என்றும்
கொண்டில்லாதவனே!
மூவேந்தரை
உனது வீரத்தால் விரட்டி
அடித்தவனே!
முந்நூறு கிராம
மக்களின் முழுமூச்சில்
கலந்தவனே!
முல்லைக்குத் தேர் தந்தவனே!
முழுமனதால் உயர்ந்து
நின்றவனே!
அழகு மலர்கள்
அங்கவை சங்கவையை
ஈன்றவனே!
அன்னை ஆதினியின்
அன்புத் துணைவனே!
புகழின் உச்சம்
தொட்டவனே!
பொய்யா வாய்மொழிக்
கபிலனுக்கோ
உயிர் நண்பனே!
வள்ளல்களில்
தலைச் சிறந்தவனே!
வாரி வழங்கிட்டு
மனம் மகிழ்ந்தவனே!
வீரச்செருக்குக் கொண்ட
வேள்பாரியே!
உனை சூழ்ச்சியினால்
வேந்தர்கள்
வென்றிருக்கலாம்!
ஆனால்,
மக்கள் அனைவரின்
உள்ளத்தையும்
கொள்ளைகொண்டு
வென்றிட்ட
மாவீரன்
நீயன்றோ!
அதற்கு, உமது
தமிழ் மக்களே
இத்தரணியில்
சாட்சியன்றோ!
பெயர் -முனைவர் ஏ.நந்தினி கண்ணதாசன்,
கல்வியாளர், எண் 13/45 நெடுஞ்செழியன் தெரு,
வேளச்சேரி, சென்னை-42.