கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொல்வடை உண்டு. வாழை வாழவும் வைக்கும்.தாழவும் வைக்கும் வாழையடி வாழை என்று தலைமுறைகள் பல தழைக்க வேண்டும் என்ற ஒற்றை பொருளில் பதம் பார்த்த நம்மை
வாழைத்தோப்பு
திருவைகுண்டம் அழைத்துச் சென்று
அதன் பின்னால் இருக்கும் ஒரு வரலாறை
வலியை நமக்குள் செருகி இருக்கிறார்கள்
தனது இளம் பருவத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தினை இயக்கியுள்ளார், இயக்குனர் மாரி செல்வராஜ்.
1999ல் திருநெல்வேலி நகரத்தை மையமாக கொண்டு இந்த வாழை படத்தின் கதை அமைந்துள்ளது. திருநெல்வேலி நகரத்தில் புளியங்குளம் கிராமத்தில் இப்படத்தின் நாயகன் சிவனைந்தன், தனது தாய் மற்றும் அக்கா திவ்யா துரைசாமி ஆகியோரோடு வாழ்ந்து வருகிறார்.
சிவனைந்தனின் உயிர் நண்பன் சேகர். இருவரும் பள்ளியில் படித்துக்கொண்டு வருகின்றனர். தனது பெற்றோர் பட்ட கடனுக்காக பள்ளி விடுமுறை நாட்களில் வாழை தோட்டத்திற்கு வேளைக்கு செல்கிறார், சிவனைந்தன். சிறுவயதில் அப்பா இறந்துவிட அம்மா அக்காவுடன் இணைந்து விடுமுறை தினங்களில் அரைமனதில் வேளைக்கு செல்கிறான், சிவனைந்தன்.
பள்ளியில் அதிக மதிப்பெண் எடுக்கும் திறமைசாலி, படிப்பில் அதிக ஆர்வம் கொண்ட சிவனைந்தன், தனது நன்பன் சேகர் உடன் இணைந்து குழந்தை பருவத்தில் மகிழ்ந்து வருகிறார். ஆனால் பள்ளி இல்லை என்றால் சந்தோஷமாக விளையாடக் கூட முடியாத சூழலில் உள்ளார், சிவனைந்தன்.
சிவனைந்தன் ரஜினி ரசிகர், சேகர் கமல் ரசிகர். அந்த கிராமத்தில் வாழும் கலையரசன் அந்த ஊர் பெரிய ஜாதி சேர்ந்த நபர்களுடன் இணைந்து சம்பளம் அதிகம் வேண்டும் என போராடுகிறார். ஒரு நாள் பள்ளி விடுமுறை தினத்தில் சிவனைந்தன் வேளைக்கு போகாமல் வேறு ஒரு இடத்திற்கு செல்கிறார். அதே நாள் அந்த ஊரில் மாடு ஒன்று காணாமல் போகிறது. பின் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதை
முல்லைக்குத் தேர் தந்தான் பாரி
என்ற ஒற்றை வரியை மட்டும் சுமந்த நம்மை வேள்பாரி மூலம் குறிஞ்சியை காட்டியது போல்
மருதத்தை சற்றே விளக்கியிருக்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க கவியரங்கத்தில் மருதத்தையும்
மௌனத்தையும்
பார்த்த நமக்கு
நமது அன்பும் அன்யோன்யமும்
வாழையடி வாழையாக தொடர்வதில் ஆச்சரியம் என்ன?
ஆம்பலும் இலக்கியச் சங்கமும் வேறல்ல
இது ஆம்பலின் இலக்கியச் சங்கமம்
நான்
ரதி