துடிக்கின்ற இதயத்திற்கு ஜாதியில்லை – அழுக்கை
வடிக்கின்ற சிறுநீரகத்திற்கு ஜாதியில்லை – காற்றை
சுவாசிக்கின்ற நுரையீரலுக்கு ஜாதியில்லை – தமிழை
வாசிக்கின்ற கண்களுக்கு ஜாதியில்லை – நம்
உள்ளிருக்கும் உறுப்புகளுக்கு ஜாதியில்லை – மேல்பூச்சு
தோலுக்கு மட்டும் ஜாதியுண்டாம்.
மனிதா! உன் பகுத்தறிவை தேடு
சாதி வெறியை சாடு
விழித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களை பாரு
நாட்டின் ஒற்றுமையை நோக்கி ஓடு
சுருண்டு கிடந்த மனித நேயம்
சுருட்டி கொண்டு எழுந்தது
சுனாமி காலத்தில்
வெடித்துக் கொண்டு கிளம்பியது
சென்னை வெள்ளத்தில்
சாதிக் பாட்ஷா இதயம்
சித்தார்த் உடலில் துடிக்கிறது.
சாதி சமயம் பார்ப்பதில்லை
சாகப் போகும் நேரத்தில்
ஒற்றுமை இல்லை என்றொரு குரல்
ஓங்கி ஒலிப்பது ஏனைய்யா?
வேற்றுமையில் ஒற்றுமையை
காண்பது எங்கள் இந்தியா!!
ஆனந்தி ராதாகிருஷ்ணன்
திருச்சி மாவட்டம்