தந்தையின் உழைப்பும்
தாயின் பாசமும்
உற்றார் உறவினர் நேசத்தோடு கட்டிய
சிம்மாசனமே எனது வீடு !
நான்! குழந்தையாக தவழ்ந்த வீடு!
பேதையாக நடந்த வீடு!
மங்கையாக அமர்ந்த வீடு!
மணப்பெண்ணாக நின்ற வீடு!
மொத்தத்தில் என்னை நிற்க வைத்து
அழகு பார்த்த ஒரே வீடு
எனது வீடு!
என் தாய்! என்னை
பத்துமாதம் சுமந்து பொற்றெடுத்தால் ஆனால்
அவள் கட்டிய எனது வீடோ! என்னை
பிறப்பில் இருந்து இறப்பு வரை
பூமித்தாயின் வடிவில் என்னை சுமக்கிறது .
நான்! விழும் போதெல்லாம்
தாங்கிப் பிடிக்கும்
தெப்பமல்லவா நீ!
பலரும் பிறந்த வீடு!
பார்பதற்கு புடித்த வீடு!
அன்னையின் அன்பு வீடு! அதுவே எனது வீடு!.
நன்றி!

பி. மோகனபிரியா
திருச்சி மாவட்டம்
முதுகலைத் தமிழ் இலக்கியம் முதலாம் ஆண்டு, ஸ்ரீ மத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருச்சி