சுதந்திரம் என்பது சற்று விசித்திரமானதே!
யார் நம்மை அடிமைப்படுத்தியது?
நாமே அடிமையானோம்!
நாமே சுதந்திரமும் கேட்கின்றோம்!
உயிரினங்கள் அடிமையாவதில்லை!
அவை எங்கும் திரிகின்றன. நாம் வீட்டிலும் நாட்டிலும் அடிமையானோம்!
நம்மில் இருந்தே நாம் சுதந்திரம் கேட்டு சுற்றுகிறோம்!
உயிரினங்கள் சண்டையிடுவது மூன்று!
உணவு! தண்ணீர்! இருப்பிடம்! நமக்கு இவையெல்லாம் இருந்தும்!
நாம் சண்டையிடுவது மூன்று!
ஆணவம்! கௌரவம்! பேராசை!
இம்மூன்றின் விலங்கை உடைப்போம்!
நிம்மதி மூச்சை விடுவோம்!
ஆணவம் என்னும் அரக்கனை அழித்து,
கௌரவம் என்னும் கொள்ளை நோயை நீக்கி,
பேராசை என்னும் பேயை விரட்டுவோம்!
வீட்டிலும் நாட்டிலும் சுதந்திரம் அடைவோம்!
வீட்டில் சுதந்திரம் பிறந்தாலே! நாட்டில் சுதந்திரம் அடைவோமே!
நலமாய் நாமும் வாழ்ந்திடவே! அன்பை பகிர்ந்து வாழ்வோமே! இ.ஷீபா.